கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் மாணவி
பெரம்பலுாரைச் சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவி, &'கின்னஸ்&' சாதனை முயற்சிக்கு தயாராகி வருகிறார்.பெரம்பலுார் மாவட்டம், துறைமங்கலம் நான்கு ரோடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் - சூரியகலா தம்பதி மகள் சிற்பகலா, 13; பெரம்பலுார் கிறிஸ்டியன் மெட்ரிக் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.கொரோனா பெருந்தொற்றால், இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக மாற்ற நினைத்தார். இதன்படி, உலகில் உள்ள நாடுகளின் பெயர்களை மனப்பாடம் செய்ய முடிவு செய்தார்.தற்போது, 201 நாடுகளின் பெயர்களை, 1.52 நிமிடங்களில் ஒப்புவிக்கிறார். இச்சாதனையை வீடியோவாக பதிவு செய்து, &'டில்லி இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு, கலாம்ஸ் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்&' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி உள்ளார். தன் பெயரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், அதற்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.