உள்ளூர் செய்திகள்

நாடு திரும்புவார்களா இந்திய விஞ்ஞானிகள்?

இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று தற்பொழுது இங்கிலாந்தில் உள்ள ஆய்வகத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கு பின் மத்திய அரசு இந்தியாவிலிருந்து சென்று வெளிநாடுகளில் பணியாற்றும் சிறந்த விஞ்ஞானிகளை மீண்டும் இந்தியாவிற்கு வரவழைத்து இங்கு பணியாற்ற வைக்கும் திட்டம் குறித்து யோசித்து வருகிறது. இத் திட்டத்தின்படி ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக குறைந்தபட்சம் 10 வாரங்கள் விஞ்ஞானிகள் இந்தியாவில் தங்கியிருந்து அவர்கள் சொந்தமாகவே ஒரு ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தை நிர்வகித்து அதன் மூலம் பிஎச்.டி., மாண-வர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இதற்காக விஞ்ஞானிகளுக்கு 1.5 லட்ச ரூபாய் ( தங்கும் வசதி, கார் உட்பட) மாத சம்பளமாக வழங்கப்படும் என்று பயோ-டெக்னாலஜி துறை செயலாளர் எம்.கே.பான் தெரிவித்துள்ளார். ரபி அகமத் (இயக்குனர், வெக்கைன் சென்டர், அட்லான்டா), மிரிகங்கா சர்(மாசாக்யூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) மற்றும் வினய்குமார் (சிகாகோ பல்கலைக்கழகம்) ஆகிய மூன்று வெளிநாட்டு வாழ் இந்திய விஞ்ஞானிகள் இந்த திட்டத்தின் படி முதலில் இந்தியாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையிலேயே ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம் அதற்காக விருப்பமான பல்கலைக் கழகங்களையும் அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தை போலவே வெளிநாட்டில் பணியாற்றும் நடுநிலையில் உள்ள இந்திய விஞ்ஞானிகளை மீண்டும் இந்தியாவில் 5 வருடத்திற்கு பணியாற்ற வைக்கும் ஒப்பந்தம் ஒன்றையும் பயோ-டெக்னாலஜி துறை செய்துள்ளது. இவர்களுக்கு மாத சம்பளமாக 50 ஆயிரம் ரூபாய் ( தங்கும் வசதி இலவசம்) வழங்கப்படுகிறது. இவர்கள் இந்தியாவில் 5 வருடத்திற்கு தங்களுக்கு விருப்பமான  துறையிலேயே ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம் அதற்காக அவர்களே விருப்பமான பல்கலைக் கழகங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த 5 வருடமானது அவர்களது செயல்பாட்டின் படி மேலும் 5 வருடத்திற்கு நீட்டிக்கப்படும். இந்தியாவில் அனைத்து ஆராய்ச்சி வசதிகளும் உடைய எட்டு ஆய்வகம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதில் ஐந்து ஆய்வகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மீதமுள்ள மூன்று ஆய்வகம் மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து உள்ளது. எட்டு ஆய்வகத்தில் இரண்டு பெங்களூருவில் அமைக்கப்பட உள்ளது. இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்டெம் செல் சயின்ஸ் ஏற்கனவே மத்திய அரசின் அனுமதியை பெற்றுள்ளது. விரைவில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் செரிபயோடெக்னாலஜி மற்றும் பயோமெட்டீரியல்ஸ்க்கும் மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புரோட்டின் அறிவியல் மையம் பெங்களூருவில் அமைய உள்ளது. பரிதாபாத் மற்றும் மொகாலியில் உள்ள பல இன்ஸ்டிடியூட்களில் இரண்டு பயோ-டெக் கிளஸ்டர்ஸ் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி நிறைவு பெற்ற பின் மும்பை, புனே மற்றும் ஆமதாபாத் ஆகிய நகரங்களிலும் பயோடெக் கிளஸ்டர்ஸ் அமைக்கப்படும் என்று பயோ-டெக்னாலஜி துறை செயலாளர் எம்.கே.பான் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்