உள்ளூர் செய்திகள்

மொழியுடன் தொடர்புடைய கலைச் சொல்லாக்கம்

புதுச்சேரி பல்கலைக்கழக சுப்ரமணிய பாரதியார் தமிழியற்புலம் சார்பில் பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, கனவு மெய்ப்பட வேண்டும் என்னும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நிலவியல் துறை கருத்தரங்க அறையில் நடந்தது. புல முதன்மையர் அறிவுநம்பி வரவேற்றார். சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழக பேராசிரியர் வேங்கடேசன் பேசியதாவது:சிங்கப்பூரில் தமிழ் கலப்பு இல்லை. தமிழ் பேசினால் தமிழில் தான் பேசுகின்றனர். அங்கிருக்கின்ற வானொலியில் கூட நல்ல தமிழ் உச்சரிக்கப்படுகிறது. கலை சொல்லாக்கம் வெறும் மொழி மாற்றம் போல் அல்லாமல், மொழியோடு தொடர்பு கொண்ட சொல்லாக இருக்க வேண்டும். அதுவே சிறந்ததாக அமையும்.மொழி மாற்றம் தமிழ் மொழியோடு இணைந்ததாக இருக்க வேண்டும். பல்கலைக் கழகங்கள் கலை, அறிவியல் சொல்லாக்கம், மொழி மாற்றம் பணியில் ஈடுபட வேண்டும். தமிழில் பேசுங்கள் என்று சொல்வதைவிட, தமிழில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். சிங்கப்பூரில் ஆட்சி மொழியாக தமிழை அமைத்துக் கொடுத்து, மிகப்பெரிய தொண்டினை சிங்கப்பூர் அரசு செய்துள்ளது. இந்தியாவில் தமிழ் மொழி இருந்தாலும் கூட ஆட்சி மொழியாக அந் தஸ்து பெறவில்லை.இவ்வாறு அவர் பேசினார். ராஜப்பாளையம் ராஜுக்கள் கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் ஆரோக்கியநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்