புத்தகங்கள் தானம் பெற்று நூலகம்
இதற்காக புத்தகங்கள் தானமாக பெறுவதற்கு, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புக் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் கலாம் பவுண்டேஷன் நிறுவனர் கிஷோர், கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள், தாங்கள் படித்து முடித்த புத்தகங்களை அங்குள்ள புக் ஸ்டேஷனில் தானமாக வழங்கி வருகின்றனர். இதுவரை, 2,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன. வெளியே, 3,000 புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்படும் புத்தகங்கள், கோவையில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள நுாலகங்கள், போலீஸ் ஸ்டேஷன்களில் நுாலகம் அமைக்க பயன்படுத்தப்பட்டு உள்ளன.பல வகைகளில் டிஜிட்டல் வேலைகளை எளிமைப்படுத்தினாலும், வாசிப்பு பழக்கம் மிகவும் அவசியம். இதன் மூலமாக நமது தன்னம்பிக்கை அதிகரிக்கும்; பொது அறிவு வளரும். இதற்காகவே இம்முயற்சியை எடுத்துள்ளோம். இரண்டு பள்ளிகளில், 1,000 புத்தகங்களை கொண்டு நுாலகம் அமைக்கப்பட்டு உள்ளது. உக்கடம் புல்லுக்காடு அடுக்குமாடி குடியிருப்பில் நுாலகம் அமைத்திருக்கிறோம். மேலும் 3 பள்ளிகளில் நுாலகம் அமைக்க முயற்சித்து வருகிறோம். அடுத்தகட்டமாக, வணிக வளாகங்களில், புக் ஸ்டேஷன் அமைத்து புத்தகங்களை சேகரிக்க உள்ளோம், என்றார்.