பாலஸ்தீனத்தில் சர்வதேச யோகா தினம்
பாலஸ்தீனத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்திய பிரதிநிதி அலுவலகத்தின் சார்பில் ரமல்லா நகரில் உள்ள பிரமாண்ட வர்த்தக டவரில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய அரசு பிரதிநிதி ரேணு யாதவ் தலைமை வகித்தார். யோகா பயிற்சியாளர் எளிய ஆசனங்களை செய்தார். அதனை பின்பற்றி பொதுமக்கள் உள்ளிட்டோர் யோகாவை செய்தனர்.