சுருக்கெழுத்தர் பணி ஆணை வழங்கல்
புதுச்சேரி: சுருக்கெழுத்தர் போட்டி தேர்வில் தேர்வான 30 பேருக்கு முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்.புதுச்சேரி அரசு துறையில் காலியாக உள்ள 30 சுருக்கெழுத்தர் நிலை 2 பதவிகளை நிரப்புவதற்கான போட்டி தேர்வு கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடந்தது. அதில், தேர்வு பெற்ற 21 பெண்கள், 9 ஆண்களுக்கு முதல்வர் ரங்கசாமி நேற்று பணி ஆணை வழங்கினார். அப்போது அமைச்சர் தேனீ ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம், பணியாளர் நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெயசங்கர் உடனிருந்தனர்.