உள்ளூர் செய்திகள்

மருத்துவ படிப்புகளுக்கு இன்றும் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்.,  பி.டி.எஸ்., கால்நடை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றுவரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கால்நடை மருத்துவம், பி.ஏ.எம்.எஸ்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு சென்டாக் நிர்வாகம் கடந்த 12ம் தேதி முதல் 18 ம் தேதிவரை ஆன்-லைனில் விண்ணப்பங்களை பெற்றது. மாணவ - மாணவியர் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்தனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க 5,700 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 3,682 பேர் விண்ணப்பித்தினை முழுமையாக பூர்த்தி செய்து சமர்பித்துள்ளனர்.இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி நீட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று 20ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,000, எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுதிறனாளிகள் 500 ரூபாய், விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். நிர்வாக இடங்களுக்கு 2,000, எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுதிறனாளிகள் 1,000, என்.ஆர்.ஐ., பிரிவினர் 5,000 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்