இன்று உலக செஸ் தினம்
1924ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச செஸ் கூட்டமைப்பு தினத்தையே உலக செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.கி.பி., 5, 6ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் தோன்றிய மிகப்பழமையான விளையாட்டே செஸ். பின் வந்த காலங்களில் இந்த விளையாட்டு நவீனமானது. 1924ம் ஆண்டு ப்ரான்சிலுள்ள பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் இறுதி நாளான ஜூலை 20ம் தேதியன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த நாளே உலக செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.