ஊதிய உயர்வு டாக்டர்கள் கோரிக்கை
சென்னை: அமைச்சரவை கூட்டத்தின் போது அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என டாக்டர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துஉள்ளனர்.இதுகுறித்து, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறியதாவது:எதிர்க்கட்சியாக இருந்தபோது, டாக்டர்களின் சம்பள உயர்வுக்கு ஆதரவாக, ஸ்டாலின் குரல் கொடுத்தார். தற்போது, முதல்வராக இருப்பதால், கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணை 354ன்படி, அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இதுகுறித்து, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதேபோல், கொரோனா காலத்தில் உயிரிழந்த டாக்டர்களின் குடும்பத்தினருக்கும், நிதியுதவி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.