உள்ளூர் செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி., புதிய கண்டுபிடிப்பு

சென்னை ஐ.ஐ.டி. வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை ஐ.ஐ.டி.யும், ஐக்கிய அரபு நாடுகளின் கலிபா பல்கலையும் இணைந்து, சிறிய ரக எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கான, குளிர்விப்பு முறையை உருவாக்கி உள்ளன. இவை பெரும்பாலும் விண்கலங்களில் பொருத்தப்படும், நுண் கருவிகளை குளிர்விக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. சந்திரயான் - 3 விண்கலத்தில் மிகவும் நுண்ணிய மின்னணு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதுபோன்ற கருவிகள் செயல்படும் போது, அவற்றின் வெப்ப அழுத்தத்தை குறைக்க பயன்படும் கருவிகள், இந்த ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.உயர் செயல்திறன் நிறைந்த கணினி கருவிகள், 1 கிலோவாட் வரை வெப்பத்தை உமிழும் தன்மை கொண்டவை. இந்த வெப்பத்தை குறைக்கும் வகையில், ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, மெல்லிய தட்டுகள் வழியே, வெப்பத்தை குறைக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி.,யின், அப்ளைடு மெக்கானிக்ஸ் பிரிவு, பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் வெங்கடேசன், ஐ.ஐ.டி., மாணவர் விஷ்ணு, கலிபா பல்கலை ஆராய்ச்சியாளர்கள் அஹமது அல்காபி, தீபக் செல்வகுமார் ஆகியோர், ஆராய்ச்சி குழுவில் இடம் பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்