தொடர்ந்து வழங்கப்பட்ட நாக் அங்கீகாரம்
சென்னை: சென்னை பல்கலைக்கு நாக் என்ற தேசிய அங்கீகார மற்றும் மதிப்பீட்டு கவுன்சிலின், ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. கடந்த, 2014ல், நாக் கவுன்சிலின் ஏ கிரேடு அங்கீகாரம் கிடைத்தது.இந்த அங்கீகாரம், 2019ல் முடிய இருந்த நிலையில், 2021ம் ஆண்டு வரை, 2 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்பட்டது. எனவே, 2,000ம் ஆண்டு முதல், சென்னை பல்கலை தொடர்ந்து நாக் அங்கீகாரத்துடன் செயல்படுகிறது என சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் துரைசாமி கூறியுள்ளார்.