உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலையில் தென்னை தினம்

கோவை: வேளாண் பல்கலை யில், உலக தென்னை தினம் கொண்டாடப்படுகிறது.உலக தென்னை தினம், 2009ம் ஆண்டு முதல் செப்., 2ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு வேளண் பல்கலையில், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் உலக தென்னை தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது.வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். தென்னை குறித்து சிறப்பு கண்காட்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்