முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு
புதுச்சேரி: முதுநிலை படிப்புகளுக்கு, வரும் 15ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்சி., மெட்ரீயல் சயின்ஸ், எல்.எல்.பி., எல்.எல்.எம்., டிப்ளமோ சட்ட படிப்புகளுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தில், வரும் 15ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளுக்கு பிற மாநில மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம், புதுச்சேரி பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.1,000; பட்டியலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500; பிற மாநில பொது பிரிவினர் ரூ.1,500; பட்டியலின மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.750 செலுத்த வேண்டும்.விளையாட்டு பிரிவில் விண்ணப்பிப்போர், ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதனை டவுன்லோடு செய்து அதனுடன் விளையாட்டு சான்றிதழ் நகல்களை இணைத்து, புதுச்சேரி, கருவடிக்குப்பம், காமராஜர் மணிமண்பத்தில் இயங்கும் சென்டாக் அலுவலகத்தில் வரும் 15ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.