விதிமீறிய பள்ளி வாகனங்கள் சிறைபிடிப்பு
ஆலந்துார்: ஆலந்துாரில், மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. அதன் சார்பில், ஆர்.டி.ஓ., சுந்தரமூர்த்தி தலைமையிலான ஊழியர்கள், பல பகுதிகளில் வாகன தணிக்கை செய்தனர்.இதில், 469 வாகனங்கள் முழுமையாக சோதனையிடப்பட்டன. பல்வேறு விதிமுறை மீறிய, 76 பள்ளி வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, 96,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.