உள்ளூர் செய்திகள்

மதுரையில் நாளை நரம்பியல் மாநாடு

மதுரை: மதுரை நரம்பியல் மருத்துவ சங்கம், அரசு மருத்துவமனை நரம்பியல் துறை சார்பில் இன்று (செப்.14) முதல் செப். 17 வரை மதுரை அழகர்கோவில் ரோடு ஓட்டல் மாரியட்டில் அகில இந்திய மூளை நரம்பியல்துறை டாக்டர்கள் மாநாடு நடக்க உள்ளது.மூளை நரம்பியல் மருத்துவத்தின் நவீன தொழில்நுட்பம், ஆய்வு முடிவுகள் பற்றி டாக்டர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். இன்று (செப்.13) மூளைக்கான அல்ட்ரா சவுண்ட் சோதனைக்கருவியின் பயன்பாடு பற்றி நரம்பியல் டாக்டர்களுக்கான பயிற்சி நடத்தப்படுகிறது. மூத்த நரம்பியல் பேராசிரியர் சீனிவாசன் தலைமையில் பயிற்சி நடத்தப்படுகிறது. அகில இந்திய கழகத் தலைவர் ஜெகந்தீப் சிங், செயலாளர் மீனாட்சிசுந்தரம், மதுரை நரம்பியல் கழகத் தலைவர் மெய்கண்டான், செயலாளர் மணிவண்ணன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்