உள்ளூர் செய்திகள்

ராணுவக் கல்லுாரியில் சேர அழைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி அறிக்கையில்,டேராடூனில் உள்ள இராக்சடிரிய இந்திய இராணுவக் கல்லுாரியில் 2024 ஜூலை பருவத்தில் சேர்வதற்கான விவரத்தை www.rimc.gov.in தெரிந்து கொள்ளலாம்.இத்தேர்விற்கு விண்ணப்பிக்க அக்.15 கடைசி நாள். அன்று மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பப் படிவங்கள் தேர்வு கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை-03 என்ற முகவரியில் சேர்த்திட வேண்டும்.01.07.2024 அன்று 11½ வயது நிரம்பியராகவும், 13 வயதை அடையாதயவராகவும், 02.07.2011-க்கு முன்னதாகவும் பிறந்திருக்க கூடாது. 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், 7ம் வகுப்பு படிப்பவர் தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்விற்கு அதிக அளவில் விண்ணப்பித்திடலாம், எனக் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்