உள்ளூர் செய்திகள்

நுண்கதிர்வீச்சாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

செங்கல்பட்டு: அரசு மருத்துவமனையில், நுண்கதிர்வீச்சாளர் மற்றும் ஆய்வக நுட்புனர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை: செங்கல்பட்டு மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும், திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு நுண்கதிர்வீச்சாளர் பணியிடமும், மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு நுண்கதிர்வீச்சாளர், ஆய்வக நுட்புனர் ஆகிய மூன்று தற்காலிக பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.இப்பணியிடத்திற்கு, வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, தாம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, செங்கல்பட்டு மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்