உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே, தஞ்சை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், தெத்துவாசல்பட்டி கிராமம் உள்ளது. இங்கு, புதுக்கோட்டை- கந்தர்வகோட்டை வழியாக தஞ்சாவூர் செல்லும் பஸ்களும், தஞ்சாவூரில் இருந்து கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை செல்லும் பஸ்களும் நிற்பது இல்லை. இதனால் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ - மாணவியரும், வேலைக்கு செல்பவர்களும் பாதிக்கப்பட்டனர்.இது குறித்து, மாவட்ட கலெக்டர், போக்குவரத்து துறையினர், தமிழக முதல்வர் தனிப்பிரிவு என பல தரப்புக்கும் புகார் அளித்தும், பல போராட்டங்கள் செய்தும், பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. அதனால், நேற்று காலை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தஞ்சை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், தெத்துவாசல்பட்டி பஸ் ஸ்டாப்பில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கந்தர்வகோட்டை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். பஸ்கள் நின்று செல்ல வழிவகை செய்யப்படும், என உறுதி கூறியதால், மறியலை விட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்