உள்ளூர் செய்திகள்

நுாலகத்தில் கதை சொல்லி நிகழ்ச்சி

உடுமலை: பூளவாடி கிளை நுாலகத்தில் குழந்தைகளுக்கான கதை சொல்லி நிகழ்ச்சி நடந்தது.உடுமலை அருகே பூளவாடி கிளை நுாலகத்தில், வாசகர் வட்டம் சார்பில் குழந்தைகளுக்கான கதை சொல்லி நிகழ்ச்சி நடந்தது. அன்பு மயமாக வாழ்வது, இயற்கையை பாதுகாப்பது, வேளாண்மையின் முக்கியத்துவம், விவசாயியின் உழைப்பு, மரம் வளர்ப்பு, பறவைகளை பாதுகாப்பது, புத்தகம் வாசித்தல் குறித்து பாடல்கள் மற்றும் கதையாகவும், கருத்தாளர் பூங்கொடி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.இதில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ந்தனர். நுாலக வாசகர் வட்டத்தலைவர் சுப்ரமணி, நுாலகர் லட்சுமணசாமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்