செய்தித்தாள் படியுங்க: கலெக்டர் அறிவுரை
கோவை: கோவை ராமநாதபுரம், 80 அடி ரோட்டில், அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லுாரி மாணவர் விடுதி, ரேஸ்கோர்ஸில், அரசு ஆதிதிராவிட நல மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.கோவை கலெக்டர் கிராந்திகுமார் நேற்று இவ்விரு விடுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கான உணவின் தரம் குறித்தும், அறைகளின் சுத்தம் குறித்தும் ஆய்வு செய்தார்.விடுதி நுாலகத்தை பார்வையிட்ட கலெக்டர் புத்தகங்கள், செய்தித்தாள்களை தினமும் படிக்க வேண்டும் என, மாணவர்களிடம் தெரிவித்தார். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் ஆங்கிலமொழி கற்பதற்கான புத்தகங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.