சாதனையாளர்களுக்கு அப்துல் கலாம் விருது
புதுச்சேரி: திருவள்ளுவர் உலக சாதனையாளர்கள் அமைப்பு சார்பில், 3ம் ஆண்டு அப்துல் கலாம் விருது வழங்கும் விழா நடந்தது.புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடத்த விழாவிற்கு, தமிழ்ச் சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். திருவள்ளுவர் உலக சாதனையாளர்கள் அமைப்பின் நிறுவனர் சரவணன் முன்னிலை வகித்தார்.விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள், கலை, இலக்கிய சாதனையாளர்கள் மற்றும் சமூக சேவகர்களின் பணிகளை பாராட்டி, 2023ம் ஆண்டிற்கான, அப்துல் கலாம் சாதனையாளர் விருதுகளை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.முன்னதாக, கலைப் பண்பாட்டு துறை இயக்கு நர் கலியபெருமாள், யோகி பதிப்பகம் பதிப்பித்த, நீலகிரி மாவட்டம், சூலூர் நல்லாசிரியர் லிங்கனின் சிந்தனைப் பூக்கள் நூலினை வெளியிட்டு பேசினார்.விழாவில், பேராசிரியர்கள் மணி, சம்பத்குமார், அசோகன், பாலசுப்ரமணியன், புதுவைத் தமிழ்ச்சங்க செயலாளர் சீனு மோகன் தாஸ், திருவள்ளுவர் உலக சாதனையாளர்கள் அமைப்பின் நிர்வாகிகள் சரஸ்வதி, சங்கர், சபீதா பானு உட்பட பலர் கலந்து கொண்டனர்.