உள்ளூர் செய்திகள்

சாகித்ய அகாடமியில் புத்தக கண்காட்சி

சென்னை: சென்னை மத்திய அரசு பதிப்பகமான நேஷனல் புக் டிரஸ்ட் அமைப்பு, நவ., 14 முதல் 20ம் தேதி வரை, தேசிய புத்தக வாரத்தை கொண்டாடுகிறது.அதேபோல், மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமியும், இந்த நிகழ்வை நடத்துகிறது. அந்தவகையில், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, 443, குணா வளாகத்தில் உள்ள சாகித்ய அகாடமி அலுவலகத்தில், வரும் 14 முதல் 20ம் தேதி வரை, சிறப்பு புத்தகக் கண்காட்சி நடக்க உள்ளது.சாகித்ய அகாடமியால் வெளியிடப்பட்ட நுால்களுக்கு, 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதேநேரம், 100 ரூபாய் உறுப்பினர் தொகை செலுத்தி புத்தக குழுவில் இணைவோருக்கு, ஆண்டு முழுதும், சாகித்ய அகாடமி அலுவலகத்தில், 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்