பள்ளி மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு
ஏகனாபுரம்: மதுரமங்கலம் அடுத்த, ஏகனாபுரம் கிராமத்தில், பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.சமீபத்தில், பரந்துார் விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சமீபத்தில் நடந்த காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் புகார் அளித்தனர்.அதன் தொடர்ச்சியாக, ஏகனாபுரம் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த, 117 மாணவ - மாணவியரை, அவர்களின் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை. இதனால், ஏகனாபுரம் நடுநிலைப் பள்ளி நேற்று வெறிச்சோடி கிடந்தது.