உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., புதிய செயலர் நியமனம்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி.,யின் புதிய செயலராக கோபால் சுந்தர்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமா மகேஸ்வரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றினார். கடந்த வாரம் மாற்றப்பட்டு, வணிக வரித் துறை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், வணிக வரித் துறை இணை கமிஷனராக பணியாற்றும், ஐ.ஏ.எஸ். அதிகாரி கோபால் சுந்தர்ராஜ், டி.என்.பி.எஸ்.சி., புதிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்