உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., வெளியிட்ட செய்திக் குறிப்பில், நடப்பு கல்வி ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, 2024 பிப்., 15 - மார்ச் 23 வரையும்; பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு, பிப்., 15 - ஏப்., 2 வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜே.இ.இ., உள்ளிட்ட தேர்வுகளை மனதில் வைத்து, பொதுத் தேர்வு அட்டவணை தயார் செய்யப்பட்டு உள்ளதாக சி.பி.எஸ்.இ., தெரிவித்து உள்ளது.இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்ற முக்கிய பாடங்களுக்கிடையே போதிய நாட்கள் இடைவெளி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், மன அழுத்தம் இல்லாமல் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக முடியும்.முழு அட்டவணை: www.cbse.gov.in/cbsenew/cbse.html


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்