உள்ளூர் செய்திகள்

சவுதி அரேபியாவில் பணிபுரிய வாய்ப்பு

சென்னை: சவுதி அரேபிய அமைச்சகத்தின், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய, மருத்துவ பணியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது தொடர்பாக, தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மகேஸ்வரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:சவுதி அரேபிய அமைச்சகத்தின், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய, ஆண் நர்ஸ்கள், பல் ஆய்வக தொழில்நுட்பர், பல் உதவியாளர், காஸ்ட் டெக்னிஷியன் போன்ற பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.தேர்வு செய்யப்படுவோருக்கு, உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு போன்றவை, அந்நாட்டில் வேலை அளிப்பவரால் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு செய்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்