உள்ளூர் செய்திகள்

பழங்குடியினர் கைவினை பொருட்கள் கண்காட்சி

ஊட்டி: ஊட்டி பகல் கோடு மந்தில் பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சி திறக்கப்பட்டது.நீலகிரியில் வாழும் பழங்குடியினர் மக்களின் கலாசாரம், தொன்மை, பாரம்பரிய கலைகள் ஆகியவற்றை பேணிக்காக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி -கூடலுார் சாலையில் உள்ள பகல் கோடு மந்தில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர், கோத்தர், இருளர், பனியர், காட்டுநாயக்கர் மற்றும் குரும்பர் பழங்குடியின மக்கள் தயாரித்த கைவினை பொருட்களுக்கான கண்காட்சி நடந்தது.அதில், தோடர் எம்ப்ராய்டரி, மூங்கிலால் செய்யப்பட்ட பூஜை கூடை, மண்பாண்டம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. அதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கேட்டறிந்து வாங்கி சென்றனர்.கலெக்டர் அருணா கூறுகையில், பழங்குடியின மக்களின் கைவினை திறனை ஊக்குவிக்கவும், சந்தைப்படுத்தவும் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும், என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்