உள்ளூர் செய்திகள்

தேர்வு வினாத்தாள்களுக்கு மாணவர்களிடம் வசூல்

ராமநாதபுரம்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக வழங்கப்படும் வினாத்தாள்களுக்காக கட்டணம் வசூலிக்கின்றனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.125, 6 முதல் 9ம் வகுப்பு வரை ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி கட்டணம் வசூலித்து காலாண்டு, அரையாண்டு, முதல், இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் எழுத மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படுகிறது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மாணவர்களுக்கு கட்டணம் இல்லா கல்வி, 14 வகை சீருடைகள், காலணி, புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி உள்ளிட்ட பொருள்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நிலையில் வினாத்தாள்களுக்கு மட்டும் கட்டணம் வசூலிப்பது சரியல்ல. வினாத்தாள்களுக்கான கட்டணத்தையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்