உள்ளூர் செய்திகள்

கவர்னர் மாளிகையில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சென்னை: ஐ.ஏ.எஸ்.  ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்கு கவர்னர் மாளிகை சார்பில் நேர்காணல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நடப்பாண்டு குடிமைப்பணிகள் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆளுமைத் தேர்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கு கவர்னர் மாளிகையில் நேர்காணல் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை கவர்னர் ரவி ஏற்பாடு செய்துள்ளார்.நிகழ்ச்சியில் கவர்னருடன் கலந்துரையாடலாம். இந்நிகழ்ச்சி ஜன.8 மாலை 4:00 மணிக்கு நடக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://forms.gle/o3oqRs5yUVwosrZT7* இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்