உள்ளூர் செய்திகள்

முதலீட்டாளர்கள் மாநாடு மாணவர்களுக்கு ஒளிபரப்பு

விருத்தாசலம்: சென்னையில் நேற்று நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.இந்த நிகழ்ச்சி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கில் காணொலி காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது, விருத்தாசலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், 96 பேராசிரியர்கள் நேரடி நிகழ்ச்சியை பார்த்தனர். ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் ராஜவேல் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்