உள்ளூர் செய்திகள்

டிட்டோ -ஜாக் ஆலோசனை

உசிலம்பட்டி: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ- ஜாக்) சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், அரசாணை 243 -ஐ ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.27 ல் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம், ஜாக்டோ -ஜியோ சார்பில் ஜன. 30 ல் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டமும் நடக்கவுள்ளது.இரு போராட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் வட்டார வள மையத்தில் ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன் தலைமையில் நடந்தது. வட்டார செயலாளர் கவுசல்யா, மாநில துணைச் செயலாளர் செல்வம் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். உரிமைக்கான இந்த போராட்டம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்