காமராஜரின் சகாப்தம் புத்தகம் வெளியீடு
கிருஷ்ணகிரி: காமராஜரின் சகாப்தம் என்ற புத்தகம் வெளியீட்டு விழா, கிருஷ்ணகிரியில் நடந்தது. புத்தகத்தை காங்., எம்.பி., செல்லக்குமார் வெளியிட, சி.இ.ஓ., மகேஸ்வரி பெற்றுக் கொண்டார்.பின், எம்.பி., செல்லக்குமார் பேசுகையில், காமராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் ஆற்றிய மக்கள் பணிகள் மட்டுமின்றி, அவரின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும், பொதுமக்கள் மட்டுமின்றி இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது, என்றார்.இதையடுத்து, 3.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 230 புத்தகங்களை பள்ளி மாணவ, மாணவியர் படிப்பதற்காக சி.இ.ஓ.,விடமும், 1.54 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 103 புத்தகங்களை பொதுமக்கள் படிப்பதற்காக மாவட்ட நுாலக அலுவலரிடமும் எம்.பி., வழங்கினார்.மாவட்ட துணைத் தலைவர் சேகர், தொகுதி பொறுப்பாளர் திம்மப்பா, மாவட்ட விவசாய அணி தலைவர் ஹரிஸ்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.