உள்ளூர் செய்திகள்

சீரழிந்த நிலையில் பள்ளி கட்டடம்

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை மூன்றாவது கிராஸ் சாலையில் உள்ள அரசு கன்னட உயர்நிலைப் பள்ளி சிதிலமடைந்துள்ளது.ராபர்ட்சன்பேட்டையில் மூன்றாவது கிராஸ் பகுதியில் 60 ஆண்டுகள் பழமையான கன்னட உயர்நிலைப் பள்ளியின் கட்டடத்தின் ஒரு பகுதி சிதிலமடைந்துள்ளது. இங்கு படித்து வந்த மாணவர்கள், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.இந்த கட்டடத்தை புனரமைப்பதில் கல்வித் துறை கவனம் செலுத்தாமல், வகுப்பு அறைகளுக்கு பூட்டுப் போட்டுள்ளனர்.இதன் அருகில் தான் வட்டார கல்வி அதிகாரி அலுவலகமும் உள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்காக அனைத்து பள்ளிகளை சேர்ந்தவர்களும், கல்வி துறையினரும் வந்து செல்கின்றனர். சிதிலமடைந்த கட்டடம் யார் கண்ணிலும் படவில்லையோ என்னவோ, யாரும் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.இனிமேலாவது, கல்வித் துறை அமைச்சர், கவனம் செலுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் புகார் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்