உள்ளூர் செய்திகள்

கைத்தறி கண்காட்சி சிறப்பு விற்பனை

மதுரை: மதுரை விளக்குத்துாண் ஜடாமுனி கோயில் தெரு எல்.என்.எஸ்., மஹாலில் தமிழ்நாடு அரசு கைத்தறித்துறை சார்பில் மெகா பட்டு மேளா, கைத்தறி பட்டுச்சேலைகளின் கண்காட்சி மார்ச் 6 முதல் 20 ம் தேதி வரை காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.காஞ்சிபுரம், கும்பகோணம், கடலுார், திருவண்ணாமலையில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், கோயம்புத்துார் கோரா காட்டன் சேலைகள், பவானி ஜமுக்காளம் உள்ளிட்டவைகளுக்கு இக்கண்காட்சியில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.பட்டு ரகங்களுக்கு 20 முதல் 65 சதவீதம் மற்றும் ரூ.500 அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது. துவக்க விழாவில் கைத்தறித்துறை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்