இறுதி தேர்வு தேதி மாற்றம்
மதுரை: மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மதுரை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளதாவது:மதுரையில் அரசு, உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் 4 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.,10ல் நடக்க இருப்பதாக இருந்த அறிவியல் இறுதி தேர்வு ஏப்.,22க்கும், ஏப்.,12ல் நடப்பதாக இருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்.,23ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.ஏப்.,23ல் சித்திரை திருவிழா நடப்பதால் அன்று நடப்பதாக சமூக அறிவியல் தேர்வு ஏப்.,24க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.