கொடை கல்லுாரி பட்டமளிப்பு விழா
கொடைக்கானல் : கொடைக்கானல் அட்டுவம்பட்டி அரசு மகளிர் கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா தெரசா பல்கலை துணை வேந்தர் கலா தலைமையில் நடந்தது. கல்லுாரி முதல்வர் ஏஞ்சலின் முன்னிலை வகித்தார். 167 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. துணைவேந்தர் பேசியதாவது: கல்லுாரியில் பட்டம் பெறுவது மட்டும் நோக்கம் அல்ல மகளிர் அதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் நுண்ணறிவு பிரிவு துறை வளர்ந்துள்ளது. கல்வி, கலாசாரம் பெற்றோர், மூத்தோரை மதிக்கும் போக்கால் வாழ்வில் உயர முடியும். இதற்கு கல்வியை நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்கால வாழ்வை ஒளிமயமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.