உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுக்கு விழிப்புணர்வு சுற்றுலா

குன்னுார்: குன்னுார் ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள, தன்னர்வ அமைப்பு சார்பில், குழந்தைகளுக்கு சமூக நலன் குறித்த விழிப்புணர்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.குன்னுார் ஆழ்வார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள, டிரான்ஸ் கலாசார மெஷின் தன்னார்வ அமைப்பு மூலம் ஏழை எளிய குழந்தைகளுக்கும், மகளிருக்கும் கல்வி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, குன்னுார் ரயில் நிலையம் அழைத்து செல்லப்பட்டு அங்கு குழந்தைகளுக்கு ரயில் இயங்கும் முறைகள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, குன்னுார் தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட குழந்தைகளுக்கு தீயணைப்பு நிலையத்தில் வாகனங்கள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டதற்கு உரிய பதில்களை குழந்தைகள் தெரிவித்தனர். தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பமீலா கூறுகையில், ஏழை எளிய குழந்தைகளின் ஆரம்பத்திலேயே கல்வியுடன், பல்வேறு நிகழ்வுகளும் சமூக அக்கறையுடன் அவர்களின் மனதில் பதிய இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்