உள்ளூர் செய்திகள்

படைப்பாளி உருவாக எழுத்தாளரே அடையாளம்

புத்தக கண்காட்சி என்ற பெயரில், பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை காட்சிப்படுத்துவதும், அதை விற்பனை செய்வதும், ஆங்காங்கே நடந்து வரும் நிகழ்வு தான்.ஆனால், பல்வேறு புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களின் புகைப்படங்களை ஓவியமாக வரைந்து, அந்த ஓவியங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி என்பது, சற்று வித்தியாசமானது தானே. கொங்கு மண்டலத்தில் இலக்கிய இதழ்களை நடத்தி வரும் ஆசிரியர்கள், எழுத்தாளர்களின் ஓவியங்கள், திருப்பூர், காந்திநகர், ஏ.வி.பி., லே அவுட் குடியிருப்போர் சங்க கட்டடத்தில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த ஓவியக் கண்காட்சியில், 50 ஓவியர்களின் உருவம் இடம் பெற்றிருந்தது; இதில், 30 ஓவியர்கள், கொங்கு மண்டலம் சார்ந்த எழுத்தாளர்கள்.இதில், சாகித்ய அகாடமி விருது பெற்ற சிற்பி பாலசுப்ரமணியம், கவிஞர் புவியரசு, சுப்ரபாரதி மணியன், கோவை ஞானி, ரவீந்திரன் ஆகியோரது படத்தை வரைந்து, அசத்தினார் கோவையை சேர்ந்த துாரிகை சின்னராஜ். எழுத்தாளர்களின் புகைப்பட ஓவியங்களால் என்ன பயன்? என அவரிடமே கேட்டோம்.தமிழகத்தை பொறுத்தவரை சமகாலத்துக்கேற்ற பெண் ஓவியர்கள், எழுத்தாளர்கள் இல்லை. அவர்களை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம். இதுபோன்று தான், சார்ஜா, அபுதாபி, துபாயில் வாழும், 30 இளம் மலையாள எழுத்தாளர்களின் ஓவியங்களை வரைந்து, எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் வாயிலாக, சார்ஜா புத்தக கண்காட்சியில் பங்கு பெறச் செய்தேன்.புக்கிஷ் விருது கூட கிடைத்தது. நம் குழந்தைகளுக்கு, நம் எழுத்தாளர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்பதே, இத்தகைய கண்காட்சியின் நோக்கம். பெண் பிள்ளைகள் மத்தியில், இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது; 8 வயதில் புத்தகம் எழுதும் சிறுமிகள் கூட உண்டு.பெண் படைப்பாளிகள் அதிகரிக்க வேண்டும் என்பதே எண்ணம்; ஆங்காங்கே உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது, ஆறுதலான விஷயம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்