மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய பழக்கடைகாரர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பூச்சந்தை பகுதியில், தோழர் பழக்கடை என்ற பெயரில் பழ வியாபாராம் செய்பவர் ஹாஜாமொய்தீன், 64. இவர் தன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்குவது வழக்கம்.இந்நிலையில், நேற்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு, பூச்சந்தையில் உள்ள கணேச வித்யாலயா உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு ஹாஜாமொய்தீன் பொது அறிவு புத்தகங்களை வழங்கினார்.அப்போது, மாணவர்களிடம் ஹாஜாமொய்தீன், கோடை விடுமுறை நாட்களை பயன் உள்ள வகையில் மாற்ற வேண்டும் என்பதற்காக தான், பொதுஅறிவு மற்றும் ஆங்கிலத்தை எளிமையாக கற்றுக் கொள்வது போன்ற புத்தகங்கள் வழங்கியுள்ளேன் என அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் அல்லிராணி, ஆசிரியர்கள் புகழேந்தி, ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.