கல்விக்கடன் பெற ஆன்லைன் வசதி
சென்னை: மாணவர்கள் கல்விக்கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 முடித்தவர்கள் இன்ஜினியரிங், மருத்துவம், கலை, அறிவியல் உள்ளிட்ட மேற்படிப்பில் சேருவர். கட்டணம் செலுத்த முடியாத மாணவருக்கு கல்விக்கடன் வழங்கப்படுகிறது. வங்கிக்கு நேரடியாக செல்ல தேவையில்லை.மத்திய அரசின் www.vidyalakshmi.co.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வீட்டு முகவரி, அருகிலுள்ள வங்கியின் பெயர், என்ன படிப்பு, எந்த கல்லுாரி, எத்தனை ஆண்டு, கல்விக்கட்டண விவரம், அலைபேசி எண், இ-மெயில் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.இணையதள ஆய்வு குழு பரிசீலனைக்குப்பின் தொடர்புடைய வங்கிக்கு பரிந்துரை செய்யும். இதன் அடிப்படையில் கல்விக்கடன் வழங்கப்படும்.