உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டு உதவித்தொகை

முதுநிலை படிப்பை ஆம்ஸ்டர்டாமில் உள்ள லூயிஸ் பிசினஸ் ஸ்கூல் பல்கலைக்கழகத்தில் தொடர உதவித்தொகை வழங்கப்படுகிறது.துறைகள்: சர்வதேச மேலாண்மை, டிஜிட்டல் பொழுதுபோக்கு வணிகம், பேஷன் மற்றும் ஆடம்பர வணிகம், உணவு மற்றும் ஒயின் வணிகம் ஆகிய துறைகளில் முதுநிலை படிப்பைத் தொடரலாம்.உதவித்தொகை: முழுநேர முதுநிலைப் படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு, கல்விக் கட்டணத்தில் 50 சதவீதம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். லூயிஸ் பிசினஸ் ஸ்கூல் ஆம்ஸ்டர்டாம் அறிவித்துள்ள போட்டியில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.பங்கேற்கும் முறை: சிறந்த உலகை உருவாக்குவோம் என்ற கருப்பொருளுடன் செயற்கை நுண்ணறிவு (AI)வை பயன்படுத்தி ஒரு வீடியோவை வடிவமைத்து leadersforabetterworld.net என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 5விபரங்களுக்கு: www.luissbusinessschool.nl


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்