உள்ளூர் செய்திகள்

குறுவட்ட போட்டியில் மாணவர்கள் வெற்றி

மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உசிலம்பட்டி குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் நடந்தன.இதில் கருமாத்துார் புனித கிளாரட் மேல்நிலைபள்ளி மாணவர்கள் பல்வேறு தனிநபர், குழுப் போட்டிகளில் 17 முதல் பரிசுகளை வென்றனர். 22 இரண்டாம் பரிசு, 10 மூன்றாம் பரிசுகளை வென்றனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான மாணவிகள் பிரிவில் ஜெனித்தா தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.மதுரை ரோட்டரி கிளப் நடத்திய தடகள போட்டி 14 வயது பிரிவில் திருமலை தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். தலைமையாசிரியர் சூசைமாணிக்கம், உடற்கல்வி ஆசிரியர் ஜேக்கப் தேவானந்த், ஆசிரியர்கள் கதிர்வேல் பாண்டியன், லில்லியன் ஜெயராக்கினி, பொருளாளர் செல்வமணி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்