உள்ளூர் செய்திகள்

விண்வெளி சங்கம் துவக்கம்

விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் விண்வெளி சங்கம் துவங்கப்பட்டது. கல்லுாரி செயலாளர் தர்மராஜ் இச்சங்கத்தை துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், விண்வெளி தொழில்நுட்பம் நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் விண்வெளி, செயற்கை கோள் ஆராய்ச்சி குறித்து மாணவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கு இச்சங்கத்தில் பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம், என்றார்.கல்லுாரி தலைவர் புகழேந்தி பாண்டியன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஸ்ரீமுருகன் வாழ்த்தினர். முதல்வர் செந்தில் வரவேற்றார். வேலைவாய்ப்பு பயிற்சி தலைவர் ராமசாமி நன்றிக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்