குறள்களால் வள்ளுவர் ஓவியம்
திருநகர்: கன்னியாகுமரி கடலில்திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 1330 குறள்களால் 25 அடி உயரம் கொண்ட திருவள்ளுவரின்முழு உருவ தோற்றத்தை ஓவியமாக வரைந்தனர். பத்தாம் வகுப்பு மற்றும்மேல்நிலை வகுப்பு மாணவர்கள் 15 பேர் இந்த ஓவியத்தை ஆறு மணி நேரம் வரைந்தனர்.மாணவர்களை பள்ளித்தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன், தலைமை ஆசிரியர் ஆனந்த், ஓவிய ஆசிரியர் முத்துமாணிக்கம், ஆசிரியர்கள் பாராட்டினர்.