உள்ளூர் செய்திகள்

கல்லுாரியில் சிலை திறப்பு

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி வளாகத்தில் சி.எஸ்.ராமச்சாரியின் வெண்கலச் சிலை திறப்பு நடந்தது.விழாவில் தலைமை வகித்த செயலாளர் குமரேஷ் திறந்து வைத்தார். பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்சிதர், ராமசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன், முரளிதாஸ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார்.முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ். சரவணன், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி பேசினர். முன்னாள் கல்லுாரி முதல்வர் ரவீந்திரன், மகளிர் கல்லுாரி முதல்வர் பொன்னி, சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் தினேஷ், கே.எல்.என். கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்