பி.எஸ்.ஜி.,யில் சந்தை மைய மாநாடு
கோவை: பி.எஸ்.ஜி., மேனேஜ்மென்ட் நிறுவனம், தனது 60ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மார்க்கெட்ரி எனும் சந்தை மைய மாநாட்டை, நாளை நடத்துகிறது.இந்த மாநாடு, நவீன சந்தை சூழ்நிலைகளில் உண்டாகும் மாற்றங்களை எதிர்கொண்டு, முன்னேற விரும்பும் நிறுவனங்கள் மற்றும் மார்க்கெட்டிங் நிபுணர்களுக்கான, முக்கிய வாய்ப்பாக அமையவுள்ளது.பி.எஸ்.ஜி., மேனேஜ்மென்ட் நிறுவன இயக்குனர் ஸ்ரீவித்யா மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு டீன் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் ஆகியோர், மாநாட்டிற்கு தலைமை வகிக்கின்றனர்.கருத்தரங்கு அமர்வுகளில், பிராண்டுகள் மாற்றத்துடன் வெற்றிகரமாக செயல்படுவது, நீண்ட கால மாற்றங்களை நிலைநாட்டுவது, புதிய நிலைகளில் பிராண்டிங், ஆப்லைன் பிராண்டிங், வாடிக்கையாளர் மையமான அனுபவங்களை உருவாக்கும் வழிகள் என, பல்வேறு தலைப்புகளில் வல்லுனர்கள் உரையாற்றவுள்ளனர். மாநாட்டிற்கு பதிவு செய்ய, விபரங்களுக்கு, 0422 - 430 4400 என்ற எண்ணில் அழைக்கலாம்.