புத்தக விற்பனை விழா
ஆண்டிபட்டி: பன்முக மேடை பதிப்பகம், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை சார்பில் ஆண்டிபட்டியில் புத்தக விற்பனை விழா நடந்தது.நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி டி.எஸ்.பி.,சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., மகாராஜன் துவக்கி வைத்தார். வி.ஏ.ஓ., (ஓய்வு) முருகேசன் முன்னிலை வகித்தார். ஆண்டிபட்டி நகர் நல கமிட்டி தலைவர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார்.சமூக மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் ராஜாராம், சரவணன், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உமா நாராயணன் பதிப்பக நிர்வாகிகள் செய்திருந்தனர்.