உள்ளூர் செய்திகள்

துபாய் யோகாவில் காரைக்குடி மாணவர்

காரைக்குடி: காரைக்குடியை சேர்ந்த இளைஞர், துபாயில் நடைபெறும் இன்டர்நேஷனல் யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.காரைக்குடி நா.புதுாரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் குரு பிரசாத், 18. இவர், பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படித்து வருகிறார். யோகாவில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக, ஆன்லைன் மூலம் 12 வயதில் பயிற்சி பெற தொடங்கியவர் இன்று தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.பல்வேறு மாநிலங்களில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பதக்கங்கள் பெற்றுள்ளார். தற்போது கேரளாவில் இந்தியன் யோகாசனா ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நடந்த மூன்றாவது தேசிய அளவிலான யோகாசன ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று துபாயில் நடைபெற உள்ள இன்டர்நேஷனல் யோகா போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்