அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
புவனகிரி: புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரங்கிப்பேட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பரங்கிப்பேட்டை வட்ட சட்டை பணிகள் குழு தன்னார்வலர் செந்தில்குமாரி, போதைக்கு எதிரான உறுதிமொழிகளை வாசிக்க மாணவர்கள் அதனை ஏற்றனர். இலவச சட்டப் பணிகள் குழு சார்பில் மூத்த வழக்கறிஞர் குணசேகரன், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து ஈஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் லெனின் ஆகியோர் போதைக்கு எதிராக மாணவர்கள் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். மாணவர்களுக்கிடையே திருக்குறள் தொடர்பான வினாக்கள் கேட்டு, பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.