திறனறி தேர்வில் மாணவி முதலிடம்
செஞ்சி: கடம்பூர் அரசு பள்ளி மாணவி திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.வல்லம் ஒன்றியம், கடம்பூர் அரசு நடுநிலை பள்ளியில் இந்த ஆண்டு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தில் தேர்வு எழுதிய 8ம் வகுப்பு மாணவி மகாலட்சுமி 147 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.மாணவர்கள் சச்சின், ராக வர்ஷினி, வேலவன் ஆகிய 3 பேர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் சிவநேசன் பாராட்டினார்.ஆசிரியர்கள் புகழேந்தி, அலமேலு, ராஜ்மோகன், அமுதன், இளங்கோவன், விமலா உடன் இருந்தனர்.